தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவுக்கு விமான நிலையம் விற்கக்கூடாது! ஊழியர்கள் எதிர்ப்பு

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை கடுமையாக எதிர்ப்பதாக விமான நிலையத்தின் சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவதை எதிர்த்து இன்று நண்பகல் தொடக்கம் விமான நிலைய வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.

விமான நிலையத்தின் சுதந்திரக்கட்சித் தொழிற்சங்கம் அதனை ஏற்பாடு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சங்கத்தின் தலைவர் முஹந்திரம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

எந்தவொரு நாட்டுக்கும் மாற்று சர்வதேச விமான நிலையம் ஒன்று அத்தியாவசியமாகும். அந்த வகையில் இலங்கைக்கு நீண்டகாலமாக தேவைப்பட்ட மாற்று விமான நிலையத்தின் தேவை 2013ம் ஆண்டளவிலேயே கைகூடியது.

அந்த வகையில் இந்த விமான நிலையத்தை இழப்பது பெரும் நட்டமாக அமையலாம்.

அத்துடன் நாட்டின் விமான நிலையமொன்றை வெளிநாடொன்றுக்கு கையளிப்பது தேசியப் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

மேலும் விமான நிலையத்தின் நிர்வாகம் வேறொரு நாட்டிடம் கையளிக்கப்படும் போது இதன் ஊழியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதுடன் விமான நிலையத்தை இந்தியாவுக்குக் கையளிப்பதை இடைநிறுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...