தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா– அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 505 ஓட்டங்கள் குவித்து 97 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா– அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 408 ஓட்டங்கள் எடுத்தது. இதில் முரளி விஜய் சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலிய அணி 2வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் (65 ஓட்டங்கள்), மிட்செல் மார்ஷ் (7) களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்றது. களத்தில் இருந்த சுமித் –மிட்செல் மார்ஷ் தொடர்ந்து விளையாடினர். இஷாந்த் சர்மா பந்தில் மிட்செல் மார்ஷ் (11) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாடின் 6 ஓட்டங்களில் ஆரோன் பந்தில் வெளியேறினார்.bris_

இதனால் 6 விக்கெட்டுக்கு 247 ஓட்டங்கள் என அவுஸ்திரேலியா இருந்தது. இதனால் இந்தியாவின் கை ஓங்குவது போல் இருந்தது. ஆனால் சுமித்துடன் ஜோடி சேர்ந்த ஜான்சன் இந்திய பந்து வீச்சை விளாசினார். இஷாந்த் சர்மா, அஸ்வின், ஆரோன் ஆகியோர் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். ஜான்சன் 37 பந்தில் அரை சதம் அடித்தார்.

அதன்பின் அணித்தலைவர் சுமித் சதம் அடித்தார். இது அவருக்கு 6வது சதமாகும் ஆகும். இதன் மூலம் அணித்தலைவராக அறிமுகமான டெஸ்ட்டில் அவர் சதம் அடித்து முத்திரை பதித்தார். இடைவேளைக்கு பின் 88வது ஓவரில் இஷாந்தின் முதல் பந்தில் ஜான்சன் ஆட்டமிழந்தார். அவர் 88 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவன் சுமித் இஷாந்த் சர்மா பந்தில் போல்டு ஆனார். அவர் 133 ஓட்டங்கள் குவித்தார்.

சுமித்– ஜான்சன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இஷாந்த் சர்மா பந்தில் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி இந்தியாவின் 408 ஓட்டங்களை கடந்து முன்னிலை பெற்றது.

9வது விக்கெட்டான லயன் 23 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க்குடன் ஹாசில்வுட் ஜோடி சேர்ந்தார். ஸ்டார்க் 53 பந்தில் அரை சதம் அடித்தார். அவருக்கு ஹாசில்வுட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அவுஸ்திரேலியாவின் ஓட்டங்கள் உயர்ந்தது. முடிவில் அவுஸ்திரேலியா 505 ஓட்டங்கள் குவித்தது ஆட்டமிழந்தது. இந்தியா 97 ஒட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Comments
Loading...