Designed by Iniyas LTD
இந்திய இராணுவத் தலைமை அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்
இந்திய இராணுவத் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ரவாற் (Bipin Rawat) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு
இந்திய தளபதி இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருப்பார் என்றும் , அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை முப்படை தளபதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருகோணமலை மற்றும் தியத்தலாவையில் உள்ள பாதுகாப்பு படை தளங்களுக்கும் இந்திய இராணுவத்தளபதி விஜயம் செய்யவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
