தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா உத்தரகாண்டில் பஸ் கவிழ்த்து விபத்து! 8 பேர் பலி

201609061643497500_8-killed-as-bus-falls-into-gorge_SECVPFஇந்தியா உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள டியூனி பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் விகாஸ்நகர் பகுதிக்கு இன்று சென்று கொண்டிருந்தது.

தாராகர் அருகே சென்றபோது, பஸ் எதிர்பாராத விதமாக 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், படுகாயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரக்காண்ட் முதல் மந்திரி ஹரிஷ் ராவத் மற்றும் கவர்னர் கே.கே.பால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...