Designed by Iniyas LTD
இந்தியா : கடும் வெயிலுக்கு நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 630 ஆக உயர்வு
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இந்தியா முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. இதில் தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் மட்டும் 470 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விரண்டு மாநிலங்களிலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கும் அனல்காற்றின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் 4 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்ப நிலை 40 டிகிரி செல்ஷியசுக்கும் அதிக அளவிலேயே பதிவாகியுள்ளது.
டெல்லியில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்ஷியசும், ஹிஸ்ஸாரில் 44 டிகிரி செல்ஷியசும், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் உள்ளிட்ட பகுதிகளில் 45.6 டிகிரி செல்ஷியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளன.