Designed by Iniyas LTD
இந்தியா செல்லும் அவுஸ்திரேலிய பிரதமர் ஈழ அகதிகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவார்
இந்தியா செல்லும் அவுஸ்திரேலிய பிரதமர் ஈழ அகதிகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் பிரதமர் ரொனி எபட் இந்த வாரம் இந்தியா செல்கிறார். இதன்போது இந்திய பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கிறார்.
அண்மையில் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் இதன் போது அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்த போதும், இந்தியா அதற்கு இணங்கி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.