Designed by Iniyas LTD
இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை தீர்த்து வைக்க ஐநா தயார்
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகளை நடுநிலையான அடிப்படையில் தீர்த்து வைக்க ஐ.நா. தயாராக உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பான் – கி – மூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், ஐ.நா.வில் இடம்பெற்ற உறுப்பு நாடுகளுக்கு இடையே பிரச்னை அல்லது கருத்து வேறுபாடு ஏற்படும் போது அதனை தீர்த்து வைக்க ஐ.நா. அலுவலகம் தயாராக இருப்பது இயல்பானது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஐ.நா.வின் உதவியைக் கோருவது சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் விருப்பம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு பதிலளித்தார்.