Designed by Iniyas LTD
இந்திய அணித்தலைவர் டோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார் கோலி
இந்திய அணித்தலைவர் டோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
நேற்று ராஞ்சியில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் சிக்கலான நிலையில் இலங்கை அணியின் 287 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. 40வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஒரு பக்கத்தில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த கோஹ்லி அணித்தலைவர் பொறுப்பை உணர்ந்து அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த வெற்றி பற்றி அணித்தலைவராக செயல்பட்ட கோஹ்லி கூறுகையில், விக்கெட் சரிந்தபோது நான் கவலை அடைந்தேன். துடுப்பாட்டக்காரர்கள் மீது எனக்கு சிறியதாக கோபம் ஏற்பட்டது.
சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் விக்கெட் ஆவதால் எரிச்சல் அடைந்தேன். அக்ஷர் பட்டேல் நான் கூறியதை கவனமுடன் கேட்டு விளையாடினார். இதனால் என்னால் நிலைத்து அணியை வெற்றி பெற வைக்க முடிந்தது.
மேலும் டோனியின் சொந்த ஊரில் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே அந்த ஷாட்டை அடித்தது மகிழ்ச்சி அளித்தது என்று கூறியுள்ளார்.