தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய அணியின் தலைவராக விராட் கோலி!

virthkoliஇங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு விராட் கோலி தலைவராக செயற்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியதையடுத்து குறித்த போட்டிகளின் தலைவராக விராட் கோலி உத்தியுாகபர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இருபதுக்கு 20 அணியில் மீண்டும் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளில் தோனி விளையாடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்திய ஒரு நாள் அணி மற்றும் இருபதுக்கு 20 அணிகளின் விபரம் பின் வருமாறு:

கே.எல்.ராகுல், ஷிகர் தவண், விராட் கோலி (கேப்டன்), தோனி, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், யுவ்ராஜ் சிங், அஜிங்கிய ரஹானே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ்

இருபதுக்கு 20 அணி:

விராட் கோலி (கேப்டன்), ராகுல், மந்தீப் சிங், தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, யஜுவேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ் குமார், ஆஷிஷ் நெஹ்ரா

Comments
Loading...