Designed by Iniyas LTD
இந்திய அணி, பாகிஸ்தானை சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் சந்திக்கவுள்ளது
உலக கிண்ண அரங்கில் முதன் முறையாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.
உலக கிண்ண(50 ஓவர்) வரலாற்றில் இந்திய அணி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் பங்கு மிகப்பெரியது.
1992ம் ஆண்டில் சிட்னியில் நடந்த உலக கிண்ணத் தொடரில், 19வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டார், இதில் அரைசதம்(54*) விளாசினார்.
பின் 1996(31, சிட்னி), 1999 (45, மான்செஸ்டர்), 2003 (98, செஞ்சுரியன்), 2011 (85, மொகாலி) என அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் கடந்தாண்டுடன் சச்சின் ஓய்வு பெற்ற நிலையில், வருகிற உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கமுடியாது.
இந்த தொடரில் முதன் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.