தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய அமைதி படையினர் தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடப் போவதில்லை. சுரேஸ்பிரேமச்சந்திரன் .

suresh-150x150

இந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையினர் சிறீலங்காவில் கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலேயே சிறீலங்காஅரசாங்கம் முதலில் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...