தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனி நிறுவனமாக மாற்றவுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனி நிறுவனமாக மாற்றவுள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனி நிறுவனமாக மாற்றுவது பற்றி மும்பை பங்குச் சந்தைக்கு ஃபைல் செய்த மனுவில், “சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிஷனை தனி உரிமை துணை நிறுவனமாக மாற்ற எங்கள் நிறுவனம் (இந்தியா சிமெண்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.chennai-super-kings

டோனி என்ற மிகப்பெரிய கிரிக்கெட் பிம்பத்தின் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில சந்தைகளிலும் நுழைய முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் இந்தியாவில் வீடுதோறும் புழங்கும் ஒரு பெயராக மாறிவிட்டதால், இந்தியா சிமெண்ட்ஸிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு தனிச்சிறப்பான பிராண்ட் இமேஜை வழங்கியுள்ளது.

மேலும் அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனம் என்ற அடையாளத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸிற்கு வழங்கியது.

2013-14ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் ரூ.166 கோடி. இந்நிலையில் செப்டம்பர் 26ஆம் திகதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனி நிறுவனமாக மாற்றவுள்ளது பற்றி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது

Comments
Loading...