Designed by Iniyas LTD
இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக அணுசக்தி பாதுகாப்பு மாநாடு அடுத்த மாதம் (மார்ச்) 31–ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
தீவிரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்காமல் பாதுகாப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டின் போது மோடி–நவாஸ் இடையேயான சந்திப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. ‘இந்த வாய்ப்பு பலமானது, மிகுந்த பலமானது’ என பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ள அந்த பத்திரிகை, ஆனால் இந்தியா–பாகிஸ்தான் பேச்சுவார்த்தை வரலாற்றை பொறுத்தவரை, அது நடைபெறும் வரை எதையும் உறுதியாக கூற முடியாது என அவர் தெரிவித்ததாகவும் செய்தியில் கூறியுள்ளது.