Designed by Iniyas LTD
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ள இலங்கை நாடாளுமன்ற குழு..
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தியா சென்றுள்ள குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்துள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
எனினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல் எதனையும் அவர் வெளியிடவில்லை.
இதேவேளை இலங்கை நாடாளுமன்ற குழு, நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தது.
குறித்த சந்திப்பின் போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் மற்றும் இலங்கையில் வழும் இந்திய வம்சாவழி மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான மனோகணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.