தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்துக் கோவிலை சேதப்படுத்திய மனநோயாளி! கோபத்தில் போலீஸ் நிலையத்தை நொறுக்கிய மக்கள்

201606150856464054_Protests-in-Jammu-after-alleged-desecration-of-Aap-Shambu_SECVPFஜம்மு மாவட்டம், ஜானிப்பூர் அருகேயுள்ள ரூப்நகரில் ஆப் ஷாம்பு என்ற பிரசித்தி பெற்ற இந்து கோயில் உள்ளது. நேற்று மாலை இந்த கோயில் வழியாக வந்த ஒருவர் அங்கிருந்த பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தினார். இதுதொடர்பாக, உள்ளூர் மக்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர் மனநோயாளியாக இருந்ததால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவ்வழியாக சென்ற சில வாகனங்களை மடக்கி தீயிட்டு எரித்தனர். இதனால், அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்த போலீசார், அவர்களை கலைந்து போகச் செய்தனர். ஆப் ஷாம்பு கோயிலை சேதப்படுத்திய மனநோயாளியை பின்னர் கைது செய்த போலீசார் அவரை காவலில் அடைத்து வைத்துள்ளனர். பொதுமக்கள் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments
Loading...