தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படலாம்

இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.   வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.    அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடல்மார்க்கமாகவே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், குறித்த அகதிகளின் படகு இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டது.  Indonesian_boat

இதில் 54 இலங்கையர்களுடன் பங்களாதேஸ் மற்றும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என மொத்தமாக 65 பேர் பயணித்திருந்தனர்.   அவர்கள் இந்தோனேசியாவின் குடிவரவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரவர்களின் நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.   எனினும் இந்தோனேசிய அரசு இது குறித்து எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

Comments
Loading...