தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்த வருடம் 3771 அகதிகள் கடலில் மூழ்கி பலி!

asasddஇந்த வருடத்தில் மத்திய தரைக்கடலை கடக்க முயன்ற 3740 புலம்பெயர் மக்கள் உள்ளிட்ட அகதிகள் பலர் உயிரிழந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் 327,800 பேர் மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்துள்ளார்கள் என்றும், அவர்களில் 3,771 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரத்தின் ஊடகப் பேச்சாளர் வில்லியம் ஸ்பிண்ட்லர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வில்லியம் ஸ்பிண்ட்லர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் மத்திய தரைக்கடலை கடப்பதன் காரணமாக, 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா அகதிகள் முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளார்கள் என்றும் வில்லியம் ஸ்பிண்ட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...