தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இனங்களுக்கிடையே நிரந்தர தீர்வை ஏற்படுத்தக்கூடிய யாப்பகவே அமையவேண்டும்!

downloadபுதிய அரசியல் யாப்பு என்பது இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நிரந்த தீர்வாக அமைய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தற்போதுள்ள அரசியல் யாப்பில் சில திருத்தங்களை மாத்திரம் மேற்கொள்ள முன்னெடுக்கப்படும் முயற்சிகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தேசிய ஐக்கிய மன்றத்தினால் வசதிகுறைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று கண்டி பொல்கொல்ல கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  புதிய அரசியல் யாப்பு தொடர்பாக  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தாா்.

அதுவேளை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை பழைய தேர்தல் முறையின் கீழ் உடனடியாக நடத்துமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

Comments
Loading...