தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இனப்படுகொலைஅரசை உலகநீதியின் முன்நிறுத்தக் கோரி ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம்

பிரித்தானியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி செல்லும் விடுதலைச்சுடர் போராட்டம் இன்று பெப்ரவரி திங்கள் 04ஆம் நாளான புதன்கிழமை மாலை 4.00மணிக்கு, இலக்கம் 10 DOWNING STREET முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியா இலங்கைக்கு விடுதலை வழங்கிய 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாளிலிருந்து, ஈழத்தமிழினம் பேரினவாத சிங்கள அரசின் திட்டமிட்ட இனக்கருவறுப்பால்;  சிதைக்கப்பட்டு வருகின்றது.

அரசபயங்கரவாதத்தால் தமிழினத்தை கருவறுக்கும் சிறீலங்கா அரசை உலகநீதியின் முன் நிறுத்தக்கோரியும், தமிழீழமக்களின்; தாயகம்,தேசியம்,தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரிக்க வேண்டும்;;, தமிழ்மக்கள் தமது அரசியல்பெருவிருப்புகளை வெளிப்படுத்தக்கூடியவகையில் தமிழீழத்திலும், புலம்பெயர்நாடுகளிலும் சர்வசனவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தும்,

இன்று புதன்கிழமை லண்டனில் ஆரம்பமான இப்போராட்டம் வரும் பெப்ரவரி திங்கள் 14ஆம் நாள் வரை லண்டனில் பல பகுதிகளிலும் மற்றும் லண்டன் புறநகர்ப்பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த விடுதலைச்சுடர் போராட்டம் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி ஊடாக, மார்ச் திங்கள் 16ஆம் நாள் சுவிஸ் ஜெனீவா ஐக்கியநாடுகள் சபை முன்பாக நடைபெற உள்ள மாபெரும் கொட்டொலிப் போராட்டத்துடன் இணைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் முதல்நாளான இன்று பெப்ரவரி 4ஆம் நாள் கணிசமான அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

மாலை 4.00மணியளவில்  ஆரம்பமான இப்போராட்டத்தில்

Srilanka’s LLRC Report is the Blue Print For  Genocide of Eelam

Tamil Nation

Our Peaceful Campaigns For Free TamilEelam are not Terrorism

TamilEelam is the only Solution

Tamils demand referendum

என்ற பதாதைகள் உட்பட பல பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் உரத்த குரல்களில் கொட்டொலிகளை எழுப்பினர். இதன்போது இன்று சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களால் ஆவேசத்துடன் கொழுத்தி எரிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்து துக்கநாளாகக் கடைப்பிடிக்கும் சிறீலங்கா சிங்கள அரசின் சுதந்திரநாள் நிகழ்ச்சியிலே தமிழ் அரசியல் தலைவர்கள் எனத் தம்மை இனங்காட்டும் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டமையானது ஏற்படுத்திய கோபாவேசத்தைப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெளிப்படுத்தினர். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மீது மட்டுமன்றி ஏனைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மாலை 6.00மணியளவில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர்;;; திரு கந்தையா இராஜமனோகரன் அவர்களின் உரையைத் தொடர்ந்து, வடமேற்கு லண்டன் மாவீரர் செயலகப் பொறுப்பாளரும் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் பெரியதம்பியின் மகனுமாகிய திரு பிறேம் அவர்கள் விடுதலைச்சுடரை ஏற்றிவைக்க, பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்மேற்கு லண்டன் செயற்பாட்டாளர்

திரு சிவானந்தம் செல்வக்குமரன் அவர்கள் விடுதலைச்சுடரேந்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.

தொடர்ந்து விடுதலைச்சுடரேந்திய பேரணி Westminister  நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கி நகர்ந்தது.விடுதலைச்சுடரேந்தி திரு செல்வக்குமரன் நடந்து செல்ல, கொட்டொலிகளை எழுப்பியபடி கைகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மக்கள் நடந்து சென்றனர்.  Westminister நாடாளுமன்ற சதுக்கத்தை சென்றடைந்த விடுதலைச்சுடரேந்திய இன்றைய போராட்டம் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர்;;; திரு கந்தையா இராஜமனோகரன் அவர்களின் உறுதியுரையுடன் நிறைவுக்கு வந்தது. மீண்டும் நாளை காலை 10 மணிக்கு விடுதலைச்சுடர் போராட்டம் Westminister நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து ஆரம்பித்து வடமேற்கு லண்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ளது.

sudar (1) sudar (2) sudar (3)

Comments
Loading...