தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இனப்படுகொலை என அறிவிக்க கோரி ஜெனீவாவில் தமிழர்கள் பேரணி

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும், சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஜெனீவாவில் இன்று பேரணியாக சென்றனர்.

gn3

 ஜெனீவா ரயில் நிலையத்தில் இருந்து மனித உரிமைகள் ஆணையகம் நோக்கி இந்தப் பேரணி நடைபெற்றது. புலம் பெயர் தமிழர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

gn4

பேரணியின் இறுதியில் திறந்த வெளி அரங்கில் தமிழ் ஈழக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அங்கு தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசி வருகிறார்கள்.

gn1

Comments
Loading...