தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்னும் எட்டே நாளில் சமஷ்டி!

tna-sampanthan-sumanthiran

2017.தை.01 சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் சமாதி மன்னிகணும் சீ.. சிலை. இனப்பிரச்சனைக்கு தீர்வை காண உதவிய இருவரையும் இலங்கை வரலாற்றில் மட்டும்மல்ல மகாவம்சத்திலும் போற்றுதல்குரிய தலைவர்களாக முடி சூடிகொள்ளும் சிங்களதேசம்!

(அ) இலங்கை அரசாங்கத்தின் மேலிருந்த கடும் அழுத்தத்தை மென் அழுத்தமாக மாற்றிய பெருமை இருவரை சாரும்.

(ஆ) தேசியத்தின் பால் பற்று கொண்ட மக்கள் கூட்டத்தை லாவகமாக ஏமாற்றி சிங்கள தேசத்தின் பால் பற்றுறுதி கொண்டு வாழ வழி வகுத்த சாமத்தியசாலிகள்!

(இ) சமஸ்டி மூலம் தீர்வை பெற வாக்கை பெற்று நாப்பது தடவைக்கு மேல் ரகஸியமாக அரசுடன் பேசி ஒற்றையாட்சிக்குள் மக்களை எப்படி  உள்ளீர்க்கலாம் என்பதை சாதுரியமாக அரசுக்கு வழிகாட்டிய உத்தமபுத்திரர்கள் வித்தகர்கள்!

(ஈ) சர்வதேசத்தின் அழுத்தத்தை தீவிரபடுத்தி உள்ளுர் மக்களின் சாத்வீக போராட்டத்தை ஊக்க படுத்தி எமக்கான தீர்வுக்கான அழுத்தத்தை அரசுக்கு உருவாக்கி கணதியான தீர்வை பெற வழிவகை செய்யாமல் அரசையே நம்பி ஒற்றையாட்சியை நிலைநிறுத்திய வீரமகா சூரர்கள்!

(உ) தாங்களே பேசி தீர்மாணித்த தீர்வை சிங்களமக்களின் அமோக ஆதரவுடன் மகிந்த வரபோகிறார் பூஞ்சான்டி காட்டி எம்மையும் ஒற்றையாட்சிக்கு கீழ் வரும் கால் குறை தீர்வை ஆதரிக்க வைத்து பெற்றோம் தீர்வை எம்மக்களின் ஆதரவுடன் என்று சாணக்கியமாக கருத்தறி வாக்கை பெற்ற சாணக்கியர்கள்.

-தமிழ்மாறன்

Comments
Loading...