தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்னும் 2 மாதங்கள் அவகாசம்..! அதிரடி நடவடிக்கை..! இது சசிகலாவின் சாட்டை..!

நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் தினகரனிடம் சசிகலா கோபமாக பேசிவிட்டு பின்னர் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.அதற்கு முன்னதாக தினகரன் சசிகலாவிடம் கூறும்போது, நம்மை கட்சியில் இருந்து நீக்கி வைத்தார்கள்.

ஆனால் கட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒருவரை ஒருவர் குற்றம்காட்டி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கும் கெட்ட பேர்தான். அதனால் நாம் தலையிட்டால் தான் இந்த பிரச்னைகளை சரி செய்ய முடியும். நான் கட்சிக்குள் இருந்த போது அமைச்சர்களும்,எம்எல்ஏக்களும் எனக்கு பயந்து வேலை செய்தார்கள்.

என்னை வந்து பார்த்து என்னுடன் கலந்துரையாடினார்கள். இப்போது அவரவர்கள் அவரவர்கள் இஷ்டத்துக்கு செயல்படுகிறார்கள் என்றாராம்.
இதை கொஞ்சம் கவனித்த சசிகலா. சரி அவர்களுக்கு 2 மாதம் டைம் கொடுப்போம். அதற்குள் கட்சியை ஒற்றுமைபடுத்தி பலப்படுத்தாவிட்டால் அதற்கு பின்னர் நடவடிக்கை எடுப்போம். அதுவரை நீ பேசாமல் இருக்க வேண்டும்.

ஏனென்றால், இன்னும் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்று உறுதி இல்லாமல் உள்ளது. பலம் யாரிடம் உள்ளதோ அங்கு போய்விடும். அதனால் இப்போதைக்கு இணைப்பு நடவடிக்கைக்கு பலம் சேர்க்க வேண்டும்.
கட்சி ஒன்று சேரட்டும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். உன் மீது உள்ள தேர்தல் கமிஷன் லஞ்ச வழக்கையும் முடிக்கப்பார் என்று அறிவுரை கூறினாராம். ஆக எடப்பாடி அரசுக்கு இரண்டு மாதம் கெடு விதித்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்த துவங்கிவிடுவார்கள் என்பதை கூறுவது போல் உள்ளது. இதனால் தினகரன் மகிழ்ச்சியடைந்துள்ளாராம். பேட்டி கொடுக்கும் போதெல்லாம் இரண்டு மாதத்தை அடிக்கடி கூறுகிறார். இப்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடியார் என்ன செய்ய போகிறார்? ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார்?

Comments
Loading...