Designed by Iniyas LTD
இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரப்பிரிவு
இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த காலப்பகுதியில் 9 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சின் தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் ஆனந்த அமரசிங்க கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்புளுவன்சா H1N1வைரஸ் நோய் தாக்கத்தால் 461 பேரும், இன்புளுவன்சா டீ வைரஸ் நோய் தாக்கத்தால் 116 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் தாமதமின்றி அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்புளுவன்சா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் ஆனந்த அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை H1N1 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 24 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 9 கர்ப்பிணிப் பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.