தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது .

தென்மாகாணத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பபா பாலியவர்தன தெரிவித்துள்ளார்.

மே மாதம் முதல் தற்போது வரை 20 சிறுவர்கள் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில்   10 பேர் இருதயத்தில் துளை, மூளை வளர்ச்சி குறைவு, அங்கவீனமான மற்றும் வெவ்வேறான நோய் காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என கண்டறிப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தென்மாகாணத்தில் இன்புளுவன்சா தொற்றுநோய் முழுமையாகக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

. சப்ரகமுவ மாகாணத்தில் இன்புளுவன்சா பரவுவதற்கான வாய்ப்பில்லை. என்றும், எனினும்   எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்புளுவன்சா தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அம் மாகாணத்தில் முழுமையாக வைரஸ் தொற்று பரவுவதைக் குறைப்பதற்கான எச்சரிக்கையும் வைத்தியஆலோசனை வழங்கப்பட்டுள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...