Designed by Iniyas LTD
இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ள தமிழ் அரசியல் கைதிகள்..
அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோர் இதற்க்கு முன்னர் கடந்த வருடம் 2017 இல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் “தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இன்று வரை யாரும் எம்மை வந்து பார்த்ததாகவோ, எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவோ இல்லை என அவர்கள் கூறியுள்ளானர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுக்கு கொழும்புக்கு செல்லும்போது, அவர்கள் மகசின் அனுராதபுரம் சிறைச்சாலைகளை கடந்தே கொழும்புக்கு செல்கிறார்கள் என்றும்,.
எனினும் அவர்கள் தம்மை வந்து பார்ப்பதில்லை என்பதோடு , தமது நிலைப்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு முயற்சிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் சிறைச்சாலை நிர்வாகமும் தங்களை மதிப்பில்லாமல் நடத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தமது பிரதிநிதிகள் வாக்கு தேவைக்கு மட்டும் தம்மை வைத்து பிழைப்பு நடத்துவதாக ” சிறை கைதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
