தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்று முதல் புதிய சுற்றிவளைப்பு – மகேஷ் சேனாநாயக்க

பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இன்று முதல் புதிய சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடுமுழுவதும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், வாகனங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக இராணுவ தலைமையகத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசியூடாக பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை பொது மக்கள் அறிவிக்க முடியும் இராணுவ தலமையகம் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...