Designed by Iniyas LTD
இன்றைய இராசிபலன்கள்……
மேஷம்
இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
இன்று பணம் வருவது அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.
மிதுனம்
இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கெளரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாகவிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
கடகம்
இன்று புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவுத் திறமை வெளிப்படும்.
சிம்மம்
இன்று அடுத்தவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.
கன்னி
இன்று திடீர் கோபம் ஏற்படலாம். நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.
துலாம்
இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாகப் பேசுவது நன்மை தரும். கடனுக்குப் பொருட்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
இன்று மேலதிகாரிகளுடன் கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு
இன்று திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தைக் குறைப்பது நன்மை தரும். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெறுவதற்குக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
மகரம்
இன்று கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வரத் தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம், பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.
மீனம்
இன்று குடும்பத்திலிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக அமையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம்.