தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்…

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரவகையில் உதவிகள் உண்டு.

மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனு கூலம் உண்டு.

கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற் சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும். புதுவேலை அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

கன்னி: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை,சச்சரவு வந்து நீங்கும்.

தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது.வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்,நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள்.

மகரம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள்.

கும்பம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும்.

Comments
Loading...