தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்…

மேஷம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும்.

ரிஷபம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.  நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும்.

 

மிதுனம்:எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்

தொடர்புடைய பதிவு

கன்னி: எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்

துலாம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

விருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.

தனுசு:ராசிக்குள் சந்திரன்நுழைவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மகரம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும் .

மீனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்

 

Comments
Loading...