தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்..

மேக்ஷம்

இன்று தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எளிதாகப் பணிகளைச் செய்து முடிப்பார்கள்.

ரிக்ஷபம்

இன்று குடும்பத்திலிருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையைத் தரும்.

மிதுனம்

இன்று எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்க செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப் போகலாம்.

சிம்மம்

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடைபெறும்.

கன்னி

இன்று எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப் போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத் திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதைக் கழிப்பீர்கள்.

துலாம்

இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டுப் பெறுவார்கள்.

விருட்சிகம்

இன்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. மதிப்பும், மரியாதையும் கூடும்.

தனுசு

இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். மனக் கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

மகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்

இன்று தீர ஆலோசனைகள் செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் நாள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும்.

Comments
Loading...