தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்…

மேக்ஷம்

இன்று தொழில் வியாபாரம் சற்று மந்தமாகக் காணப்பட்டாலும் பணம் வருவது தடைப்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

ரிக்ஷபம்

இன்று வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பது பற்றிய மனச் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.

மிதுனம்

இன்று பணப் பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதலான இலாபம் கிடைக்கப் பாடுபடுவார்கள்.

கடகம்

இன்று குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபட வேண்டியிருக்கும்.

சிம்மம்

இன்று காரியத் தடை தாமதம் ஏற்படலாம். கவனமாக செயல்படுவது நல்லது. மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம்.

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டுச் செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலைத் தரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் திடீர்ப் பிரச்சினை ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.

விருட்சிகம்

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்குப் பொறுப்பேற்காமலிருப்பது நல்லது.

தனுசு

இன்று குடும்பத்திலிருப்பவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் காணப்படும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம்.

மகரம்

இன்று எதிர்ப்புக்கள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

கும்பம்

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.

Comments
Loading...