Designed by Iniyas LTD
இன்றைய ராசி பலன்..
மேஷம்:
உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்:
அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒருபகுதி அடைபடும். பெண்கள் அக்கம்பக்கத்தினரின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மிதுனம்:
எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழிலில் இடையூறுகளை சரிசெய்ய முயல்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மின் உபகரணங்களை கவனமுடன் கையாளவும்.
கடகம்:
அன்றாடப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு உயரும். புத்திரரின் செயல்பாடு கண்டு பெருமிதம் உண்டாகும்.
சிம்மம்:
உற்சாகமுடன் செயல்பட்டு வருவீர்கள். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர்.
கன்னி:
நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய ஆடம்பர பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
துலாம்:
முன்யோசனையுடன் இருப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பணவரவுக்கேற்ப செலவும் உயரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
விருச்சிகம்:
சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. தொழிலில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சீரான வளர்ச்சி காண்பர்.
தனுசு:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் செலவு கூடும். ஆரோக்கியம் பலம் பெறும்.
மகரம்:
வழக்கத்திற்கு மாறாக பணிச்சுமை அதிகரிக்கும். நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும்.
கும்பம்:
கடந்த கால உழைப்பின் பயனைப் பெறுவீர்கள். தொழில்,வியாபாரத்தில் நவீன மாற்றங்களைச் செய்வீர்கள். வருமானம் திருப்தியளிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.
மீனம்:
பேச்சில் நிதானம் கடைபிடிப்பது நல்லது. தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம்.