தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இயல்புநிலைக்கு திரும்புகிறது ஸ்ரீநகர்: 17 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வு

srinagar_1ஸ்ரீநகரில் 17 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் பர்ஹான் வானியை, கடந்த 8-ஆம் தேதி பாதுகாப்புப் படையினர்  என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 46 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக, அனந்தநாக் மாவட்டத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். 5,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை மேலும் பரவாமல் இருக்க மாநிலத்தில் கடந்த 17 நாட்களாக தொலைபேசி, இணையதளச் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது அங்கு படிபடியாக இயல்புநிலை திரும்பி வருவதால் 17 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன், இணையதளச் சேவைகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தலைநகர் ஸ்ரீநகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகளை ரத்து செய்தும் மாவட்ட மாஜிஸ்திரேட் இன்று காலை உத்தரவிட்டுள்ளார். பதற்றம் குறைந்ததை அடுத்து ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Comments
Loading...