தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரணைமடு மற்றும் முத்தையகட்டு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான ஆயத்தங்கள்- அவதானமாக இருக்குமாறு மக்களிற்கு அறிவுறுத்தல் ..

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் #37அடி 3அங்குலத்தை தற்பொழுது எட்டியுள்ளது.

குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் கலிங்கு ஊடாக வான் 1 அடிவரை பாய ஆரம்பித்துள்ள நிலையில் 11 வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொண்டுவருகிறார்கள் .

எனவே பன்னங்கண்டி,முரசுமோட்டை, ஐயன்கோவிலடி, பளையவட்டக்கச்சி,பெரியகுளம், வெளிக்கண்டல், கண்டாவளை, ஊரியான், போன்ற பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை  முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுகுளத்தின் நீர் வரத்து அதிகரித்து கானப்படுவதால் கலிங்கு ஊடாக வான் 6 அங்குலம் பாய ஆரம்பித்துள்ள நிலையில் இன்று  திறக்க இருப்பதனாலும் கீழ்குறித்த பிரதேசங்களில் பேராற்றங்கரையை அண்டிய மக்கள் மிகஅவதானமாக இருக்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. முத்துவிநாயகபுரம்
2. கனேசபுரம்
3. பேராறு
4. பண்டார வன்னி கிராமம்
5. கெருடமடு
6. மன்னகண்டல்

Comments
Loading...