Designed by Iniyas LTD
இரண்டாம் உலகப்போர் குண்டை செயலிழப்பதற்காக 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது வீசப்பட்ட குண்டை செயலிழக்க செய்ய அந்நாட்டின் ஆக்ஸ்பர்க் நகர மக்கள் சுமார் 54,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
உலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றது ,ஆனாலும் இரண்டாவது உலகப்போருக்கு தனி இடம் உண்டு. காரணம் போர் என்பது தனி இரு நாடுகள் சண்டை இடுவது. ஆனால் உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து உலகத்தின் பல பகுதிகளில் நடந்த சண்டையில் உயிர் சேதமும் ,பொருட் சேதமும் கணக்கிட முடியாதவை .
கடந்த 1939-ஆம் ஆண்டில் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நேச அணி நாடுகள், அச்சு அணி நாடுகள் என இரு பெரும் பிரிவுகளாக பிரிந்து உலக நாடுகள் போரிட்டன. ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகள் நேச அணியிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அச்சு அணியிலும் இருந்தன.
உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.
கடந்த 1945-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை அமெரிக்கா வீசியது. இதன் விளைவாகச் ஜப்பான் சரணடைந்து, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின. அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெர்மனி நகரான ஆக்ஸ்பர்க்கில் நடைபெற்ற கட்டுமான பனியின் போது, இரண்டாம் உலகப் போரில் அந்நாட்டின் மீது வீசப்பட்ட குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 1.8 டன் எடை கொண்ட அந்த குண்டு பிரிட்டிஷ் படைகளால் வீசப்பட்டவை என்றும் கூறப்பட்டது.
தொடர்ந்து, இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய முடிவெடுத்த ஜெர்மனி, அதற்கான நாளாக கிறிஸ்துமஸ் தினத்தை தேர்ந்தெடுத்தது. ஏனெனில், விடுமுறை நாளான அன்று, போக்குவரத்து உள்ளிட்டவைகள் குறைவாக இருக்கும் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு மக்கள் சென்று விடுவர் என கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, குண்டை செயலழிக்க செய்யும் பொருட்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்பகுதியில் இருந்த சுமார் 54,000 பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஜெர்மன் நிபுணர்கள் அக்குநடை செயலழிக்க செய்துள்ளனர்.