தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரண்டாம் தடவையாக சர்வதேச கால்பந்து சம்மேளன விருதைப் பெற்றுள்ளார் ரொனால்டோ

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் திறமை அடிப்படையில் 209 சர்வதேச அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் அளிக்கும் ஓட்டு அடிப்படையில் சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுவார்.ரொனால்டோ

2013–ம் ஆண்டக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவை சேர்ந்த லியோலை மெஸ்சி (பார்சி லோனா) போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரோனால்டோ (ரியல் மாட்ரிட்) பிரான்சை சேர்ந்த பிராங்க் ரைபரி (பேயான் முனிச்) ஆகியோர் 3 பேர் இடம் பெற்று இருந்தனர்.

இதில் ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது. அவர் 2–வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2008–ம் ஆண்டு சிறந்த வீரர் விருதை பெற்று இருந்தார்.

1365 பு-ள்ளிகளை பெற்ற ரொனால்டோ 2013–ம் ஆண்டில் 59 போட்டியில் 69 கோல்கள் அடித்திருந்தார். தொடர்ந்து 4 ஆண்டுகள் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை (2009, 2010, 2011, 2012) பெற்ற லியோனல் மெஸ்சி 1,197 பு-ள்ளிகளை பெற்று 2–வது இடத்தை பிடித்தார்.

Comments
Loading...