தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் ஐவர் பலி..

அலாஸ்காவில் மிதக்கும் விமானங்கள் இரண்டு நடுவானில் மோதியதில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் 7 நாள் பயணம் மேற்கொண்டவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் மிதக்கும் விமானத்தில் அலாஸ்கா பகுதியில் உள்ள கெட்சிகன் என்ற இடத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதே வேளையில் 4 பேர் கொண்ட வேறு சுற்றுலாக் குழுவினர் மற்றொரு மிதக்கும் விமானத்தில் பயணித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மிதக்கும் விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டன.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...