தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் – விமர்சனம்

நாயகன் ஆதவாவும், நாயகி அவந்திகா மோகனும் ஏழு மாதமாக காதலித்து வருகின்ற வேளையில்,சிறு பிரச்சனை ஒன்றினால்  இரண்டு பேரும் பிரிந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில், நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதையறிந்த ஆதவா, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்கிறார்.
இதற்காக தன் நண்பர் துணையுடன் ஒரு தாதா கும்பலுடன் சென்று அவந்திகாவை கடத்தி வர திட்டம் போடுகிறார்.
அதன்படி தாதா கும்பலுடன் ஒரு வண்டியில் பயணிக்கிறார் ஆதவா. இறுதியில் நாயகன் ஆதவா, நாயகி அவந்திகாவை கடத்தி திருமணத்தை நிறுத்தினாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆதவா, சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் அழகாக இருக்கிறார்.  நடிப்பில் கவனம் செலுத்தினால் இனிவரும் படங்கள் சிறப்பாக அமையும்.
நாயகியாக நடித்திருக்கும் அவந்திகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காதலியை கடத்தி திருமணம் செய்யும் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அசோக் ஆர் நாத். ஆனால், கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்க தெரியவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
லியாண்டர் லி மார்ட்டி இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே. பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஜே.எஸ்.கேவின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.
Comments
Loading...