Designed by Iniyas LTD
இராணுவத்தினரால் விரைவில் விடுவிக்கப்படவுள்ள பகுதியில் 80 சதவீதமானவை வடமாகாணத்துக்குரியவை…
இராணுவத்தினரால் விரைவில் விடுவிக்கப்படவுள்ள 522 ஏக்கர் காணிப்பரப்பில் 80 சதவீதமான காணிகள் வடமாகாணத்துக்குரியவை என இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்துவிடம் வடக்கு கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பில் வினாவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றகோரப்பட்ட நிதியின் ஒருபகுதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சிய பகுதிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைத்த பின்னர் அந்தக் காணிகள் விடுவிக்கப்படும், எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி தெல்லிப்பளையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் 4.7 ஏக்கர் நிலப்பரப்பு காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வணிக ரீதியான சொத்துக்களை விடுவிப்பதற்கு இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளில் 94 வீதமானவை நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும், . எஞ்சிய பணிகளை 2020 இற்கும் நிறைவு செய்யப்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்து மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.