Designed by Iniyas LTD
இராணுவத்திற்கு செலவிடப்படும் தொகை அதிகரித்துள்ளது
இராணுவத்திற்கு செலவிடப்படும் தொகை அதிகரித்துள்ளதாக ஸ்டாக்கோமை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனமான ‘சிப்ரி’ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. 
இதுபற்றி, அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் பின்வருமாறு:- கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போது ராணுவத்திற்கு அதிக அளவில் செலவு செய்யும் நாடுகள் அதிகரித்துள்ளது. உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம், ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல், சவுதி அரேபியாவில் ஈரானின் அச்சுறுத்தல்கள், தென் சீனக்கடலில் சீன ராணுவப்படையின் விரிவாக்கம், கிரிமியா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகள், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான வான்வெளித் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் பல நாடுகள் தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்கா ராணுவத்திற்காக மட்டும் 596 பில்லியன் டாலர்களை செலவிடுகிறது. சீனா (215 பில்லியன் டாலர்கள்) சவுதி அரேபியா (87.2 பில்லியன் டாலர்கள்), ஈராக் (13.1 பில்லியன் டாலர்கள்) பணத்தையும் ராணுவத்திற்காக செலவிடுகிறது.