Designed by Iniyas LTD
இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் – மகேஷ் சேனநாயக்க..
மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருப்பதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் புதைகுழியில் மீட்கபப்ட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை என கூறப்பட்டுள்ளதை அடுத்தே அவர் இதனை வெளியிட்டுள்ளார்.
மேலும் மன்னார் புதைகுழிக்கு இராணுவமே பொறுப்பு என அனைத்துலக சமூகத்திடம் கூறுவதற்கு பலரும் தயங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு அனைத்து தரப்பினரும், ஏனையவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்னதாக, விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைப் பெற்று உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.