தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழகத்தின் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.fish

ஸ்ரீலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 76 படகுகளை விடுவிக்க வேண்டும் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு படகுகள் அரசுடைமையாக்கப்படும் என்ற இலங்கை மீன்வளத்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மீனவர்கள சார்பில் ; மத்திய அரசு  ஸ்ரீலங்கா அரசுக்கு கன்டனம் தெரிவிக்க வேண்டும் ,பாரம்பரிய கடல்பகுதியியல் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். நாகையில் நாளை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் இராமேஸ்வரத்தில் மாத்திரம் நான்காயிரம் மீன்பிடித் தொழிலாளர்களும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சார்புத் தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாகையில் நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில்  ராமநாதபுரம், புதுக்கோட்டை, துர்த்துக்குடி, தஞ்சை, நாகை கன்னியாகுமரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் சுமார் நான்கு ஆயிரத்து 600  மேற்ப்பட்ட விசைபடகுகளை கரையில் நிறுத்தி வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...