Designed by Iniyas LTD
இருபது தமிழர்கள் படுகொலை – இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்?…
20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன் என ஆந்திர அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மனுக்கள் மீது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமெல்லாம் விசாரணை நடைபெற்றது, யாரிடமெல்லாம் வாக்குமூலம் பெறப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன் என வினவிய நீதிபதிகள் வரும் செவ்வாய்கிழமை வழக்கு டைரியை சமர்ப்பிக்க ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டனர்.
சிறப்பு புலனாய்வு குழு குறித்த விவரங்களை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழங்கினார். இதனை அடுத்து சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை பொறுத்தே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவெடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சிறப்பு புலனாய்வு குழு பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.