தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து சித்ரதுர்கா மாவட்டம் நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு காரின் டயர் ஹிரியூர் தாலுகா, மெடிகுர்கே கிராமம் அருகே திடீரென்று வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பை ஏறி கடந்து, எதிர் திசையில் வந்த இன்னொரு காரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இரு கார்களிலும் இருந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Comments
Loading...