தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று மும்பையில் நடக்கும்

ஐபிஎல் தொடரில் மும்பையில் நடக்கும் முதல் தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன.

8 அணிகள் இடையிலான 8வது ஐபிஎல் போட்டியின் கோலாகல தொடக்க விழா கொல்கத்தாவில் கடந்த ஏப்ரல் 7ம் திகதி அரங்கேறியது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 8 முதல் லீக் ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் (56 ஆட்டங்கள்) நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

லீக் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.csk_mi

அதே சமயம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் நடக்கிறது.

இதில் முதல் இரு இடங்களைப் பிடித்த சென்னை- மும்பை அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மும்பை அணிக்கு கூடுதல் பலமாகும்.

சென்னை– மும்பை இடையேயான ஆட்டத்தில் தோற்கும் அணி 2வது தகுதி சுற்றில் விளையாடும்.

தோற்கும் அணி, பெங்களூர்– ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இந்த ஆட்டம் 22ம் திகதி ராஞ்சியில் நடக்கிறது.

Comments
Loading...