தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதர் உள்ளிட்ட உயர்மட்ட குழு யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்

இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவொன்று இன்று யாழ்.வருகை தந்துள்ளது. குடாநாட்டின் பல பகுதிகளிற்கும் விஜயம் செய்துவரும் இக்குழு பல தரப்புக்களையும் சந்தித்து பேசிவருகின்றது. அத்துடன் குடாநாட்டு பத்திரிகைகளது உரிமையாளர்களையும் அது சந்தித்து வருகின்றது.senpakam

இதனிடையே தற்போது கொழும்பிலுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அழைப்பின் பேரில் நேரடியாக கொழும்பிலுள்ள பிரிட்டிஸ் தூதுவராலயத்திற்கு விஜயம் செய்து அங்கு பேச்சுக்களை நடத்தியுள்ளார். இன்று மாலை குழவினர் சிவில்சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப்பேசவுள்ளதாக தெரியவருகின்றது.

Comments
Loading...