Designed by Iniyas LTD
இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு…
எதிர்வரும் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், மனித உரிமை விடயத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக இலங்கை அரசு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து கூறிய கொழும்பிலுள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ரங் லாய் மார்க்கியு ,
மனித உரிமை விடயத்தில் இலங்கையில் முன்னேற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது எனினும் செயற்பாடுகள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில் காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டமை மிகப்பெரிய நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு பல முன்னேற்பாடான செயற்பாடுகள் உள்ளதாகவும், எனினும் மக்களின் காணிகளை இராணுவம் விடுவிக்கும் வேகம் போதாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மனித உரிமை விடயம் குறித்து எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் காலஅவகாசம் அவசியம் என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியயல்ல தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
