தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் இந்திய வெளிவிவகாரச் செயலர்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு  செல்லவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

விஜய கேசவ் கோகலே இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

அங்கு அவர்     தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர் ,வெளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அவர் நாளைய தினம் சந்தித்துப் பேச்சு நடத்தஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவிர்கும் இடையில்  இழுபறியாகவுள்ள சுமார் 15 வரையான பாரிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது  குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்தல விமான நிலைய கூட்டு முயற்சி உடன்பாடு, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், எட்கா உடன்பாடு குறித்தும் இந்திய வெளிவிவகாரச் செயலர்  கூடுதல் கவனம் செலுத்துவார் என  தகவல்  வெளியாகியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...