Designed by Iniyas LTD
இலங்கையிலிருந்து லண்டன் சென்றவர் லண்டன் விமான நிலையத்தில் கைது!
இலங்கையிலிருந்து லண்டன் வந்த பயணி ஒருவர் ஹீத்ரோ விமான நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட சிறிலங்கன் விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவித்தனர்.
இதனையடுத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.