Designed by Iniyas LTD
இலங்கையில் இன்டர்நெட் ஊடாக மோசடி! பல கோடி ரூபாய்க்களை இழந்த வர்த்தகர்கள்
இணையத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசடி காரணமாக ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டுள்ள இலங்கையின் முக்கிய வர்த்தகபிரமுகர்கள் பலர் பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளனர் என பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.இனந்தெரியாத குழுவொன்று 12 பிரபல வர்த்தகர்களிடமிருந்து சுமார் 140 மில்லியனிற்கு மேல் மோசடி செய்துள்ளது. இந்த குழுவினர் குறிப்பிட்ட வர்த்தகர்களின் நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அறிவதற்காக அவர்களின் மின்னஞ்சல்கள், மற்றும் கணினிகளிற்குள் ஊருடுவியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிதி மோசடி தொடர்பில் எங்களிற்கு 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மின்னஞ்சல் மூலம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இரு தரப்பினரிற்கு மத்தியில் மூன்றாவது தரப்பாக இணைந்து கொண்டவர்களே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.